திருமணம் குறித்து மனம்விட்டு பேசிய நடிகை திரிஷா
நடிகை திரிஷா திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திரிஷா. அந்த வகையில் வருகிற டிசம்பர் 13 ஆம் தேதியுடன் கதாநாயகியாக 20 ஆண்டுகளை திரிஷா நிறைவு செய்கிறார்.
20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ எந்த மாற்றமும் இல்லாமல் அதே தோற்றத்தில் இருக்கிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட திரிஷாவின் அழகை வியக்காதவர்களே இல்லை என சொல்லலாம்.
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, குந்தவையாக நடித்துள்ள திரிஷாவின் அழகில் மயங்கி சில விநாடிகள் சிலையாக நிற்பார். கிட்டத்தட்ட ரசிகர்களின் ரியாக்சனும் அதுவாகத்தான் இருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு திரிஷாவுக்கு வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இதுவரை திருமணம் செய்துகொள்ளாதது குறித்து ஊடகங்களுக்கு திரிஷா பதிலளித்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்டால் என்னால் கூட பதில் சொல்ல இயலாது. யாருடன் இருக்கிறேன், யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து அமையும்.
ஒருவருடன் பழகும்போது இவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்று தோன்ற வேண்டும். விவாகரத்துகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த சில பேர் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இல்லை. அது போன்ற திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.