இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

Prasu
2 years ago
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளருமான ஜெய் ஷா நேற்று , போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று கூறினார்.

ஆசியா கோப்பை 2023 நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஷா ஊடகங்களிடம் கூறினார். “எங்கள் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது, எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம், ஆனால் 2023 ஆசிய கோப்பைக்கு, போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள்  அங்கு பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது, அவர்கள் இங்கு வர முடியாது. கடந்த காலங்களிலும் ஆசியக் கோப்பை நடுநிலையான மைதானத்தில் நடைபெற்றுள்ளது என்று “ஏசிசி தலைவர் குறிப்பிட்டார்.

ஏசிசியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

பாகிஸ்தானும் இந்தியாவும் 2012 முதல் இருதரப்புத் தொடரில் விளையாடவில்லை. பாகிஸ்தான் கடைசியாக 2016 இல் டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் சென்றது, அதே நேரத்தில் இந்தியாவின் கடைசி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2008 இல் ஆசிய கோப்பைக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!