தமிழீழ விடுதலை புலிகளை பார்த்து வியந்த இந்திய இராணுவ கேர்னல்
இந்திய இராணுவ படையில் கர்னலாக செயற்பட்ட ஒருவர் தமிழீழ விடுதலை புலிகளை பார்த்து மெய்சிலிரத்ததாக தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய சிறப்புப் படை மேஜர் Abhay Sapru தனது தந்தையான முன்னாள் முன்னாள் கேர்னல் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பில் பகிர்ந்துக் கொண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற கர்னலான அவரது தந்தை இந்திய அமைதி காக்கும் படையில் (IPKF) தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் சவாலான பணியிலிருந்து திரும்பியபோது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மரியாதையும் செலுத்தியுள்ளார் என முன்னாள் இந்திய சிறப்புப் படை மேஜர் Abhay Sapru குறிப்பிட்டுள்ளார்.
யூடியுப் செய்தி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்திய அமைதி காக்கும் படை வடக்கு-கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டபோது, விடுதலைப் புலிகளுடனான அனுபவத்தை Abhay Sapru நினைவுகூர்ந்தார்.
காஷ்மீர் போன்ற பிற பகுதிகளில் பணிபுரிந்த போதிலும், இலங்கையில் பணியாற்றிய நேரமே மிகவும் சவாலானதாகக் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பணியாற்றியவர்களில் யாரிடமாவது நீங்கள் இதைக் கேட்டால் அவர்களும் இவ்வாறே பதிலளிப்பதாக அவர் கூறியுள்ளார். புத்திசாலி மற்றும் ஊக்கமுள்ள மிகவும் சிறப்பான போராளிகளை அங்கு பார்க்கலாம்.
அவர்கள் பயிற்சியளிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த நிலப்பரப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்டால், அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவார்கள். அமெரிக்க சிறப்புப் படைகள் சரியான வேலையில் சரியாக செயற்படுமவார்கள். அவர்கள் சரியாக செயற்பட்டால் மிகவும் அழிவுகரமான ஆயுதமாக இருப்பார்கள்.
அவ்வாறே தமிழீழ விடுதலை புலிகளும். இந்திய அமைதி காக்கும் படை எதிர்கொண்ட பெரும் உயிரிழப்புகளை நினைவு கூர்ந்த அவர், சென்ற ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனும் உயிரிழப்புகளை சந்தித்ததென கூநினார்.
அந்த கட்டத்தில் இலங்கைப் படைகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் அழுத்தத்தின் கீழ் இந்த மக்கள் மொத்தமாக தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். ஓய்வு பெற்ற இந்திய கர்னல் எனது தந்தை 1980ஆம் ஆண்டுகளில் ஆரம்பகால தமிழ் போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டார். அதனை என்னால் நினைவுக்கூற முடிகின்றது. தமிழ் போராளிகள் எனது தந்தை மிகவும் கவர்ந்தார்கள்.