150 ஆண்டுகள் பழைமையான குஜராத் கேபிள் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

Prathees
2 years ago
150 ஆண்டுகள் பழைமையான குஜராத் கேபிள் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில், நேற்று மாலை, திடீரென கேபிள் பாலத்தின் மத்திய பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினரும், உள்ளூர் மக்களும், பொலிஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் அதிகாலை வரையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த போது 100க்கும் அதிகாமானோர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இடிந்து விழுந்த பாலம், நேற்று முன்தினத்தில் இருந்தே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. அப்படி இருந்தும் மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேர் அதன் மீது நின்று பூஜை செய்ததால் பாலம் இடிந்துவிட்டது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்த 26-ம் தேதி குஜராத் புத்தாண்டு தினத்தன்று தான் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்டது. 7 மாதத்திற்கு முன்புதான் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் கரைக்கு வர போராடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!