பிரமாண்டத்தின் உச்சம்- ரிலீஸ் ஆனது 'அவதார் 2' படத்தின் டிரைலர்!
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ’அவதார்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே. வெறும் 237 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 2974 பில்லியன் டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பதும், இந்தியாவில் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பிரம்மாண்டமான காட்சி அமைப்பு, கற்பனை கூட செய்ய முடியாத கிராபிக்ஸ் காட்சிகள், தண்ணீருக்குள் இருக்கும் சொர்க்கம் ஆகியவற்றை பார்க்கும் போது தரமான சம்பவம் இருக்கு என்பது ரசிகர்கள் மத்தியில் உறுதியாகி உள்ளது.
இந்த படத்தின் ரன்னிங் டைம் ஏற்கனவே மூன்று மணி நேரங்களுக்கு மேல் என்று கூறியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.