2 வது திருமணம் செய்துகொண்ட இயக்குனர் அருண்ராஜா காமராஜ்
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ’கனா’ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பாடலாசிரியராகவும் சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
இவருடைய மனைவி சிந்து கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென கரோனாவால் மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து குறித்துப் பேசும்போது ‘நீ எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறாய் என்பது தெரியும். உன் வெற்றியில் எப்போதும் சிந்துவின் பங்கு உண்டு. இனி நீ பெறப்போகும் அனைத்து வெற்றிகளிலும் உயரத்திலும் சிந்து கூடவே இருப்பாங்க’ எனக் கூறினார்.
இதைக்கேட்ட இயக்குநர் அருண்ராஜா மேடையிலேயே உடைந்து அழுதார்.
இந்நிலையில், தற்போது இரண்டாவதாக அருண்ராஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.