தோழியின் கணவரை திருமணம் செய்யப்போகும் ஹன்சிகா -வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் சோஹைல் கதுரியா, ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் ’மஹா’ என்ற திரைப்படம் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னரான சோஹைல் கதுரியா என்பவரை வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்யப்போகிறார். தனது வருங்கால மாப்பிளையுடன் இருக்கின்ற புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ரிங்கி என்பவரை சோஹைல் கதுரியா திருமணம் செய்ததாகவும் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ரிங்கி என்பவர் ஹன்சிகாவின் நெருங்கியத் தோழி என்பதால் அந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பதும், அந்த திருமணத்தில் அவர் மணமக்களுடன் நடனமாடியிருக்கிறார் என்பதும் வீடியோ ஒன்றின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
தோழியின் திருமணத்தில் நடனமாடிய ஹன்சிகா தற்போது அந்த தோழியின் முன்னாள் கணவரையே திருமணம் செய்யப்போவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.