நடிகை த்ரிஷா மருத்துவமனையில் அனுமதி- பூரண குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து
நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காலில் கட்டுப் போட்ட புகைப்படத்தை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் விரைவில் த்ரிஷா பூரண குணமடைந்து வீடு திரும்பவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜீத் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ படத்தின் நாயகி த்ரிஷா தான் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.