நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி

Nila
2 years ago
நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் அவருடைய கணவரும் பாடகருமான செந்தில் ஒரு சில படங்களில் பாடியுள்ளார் என்பதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ‘லைசென்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்றும், பெண்களின் மேன்மையை இந்த படம் எடுத்து வைக்கும் வகையில் கதையம்சம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ராதாரவியின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ராஜலட்சுமிக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!