அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் முதல் சிங்கில் இணையதளத்தில் லீக்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜித், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.
சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள ‘’சில்லா சில்லா’’ என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இப்பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், #ChillaChilla என்ற பாடலின் ஷூட்டிங் நடந்து வருகிறது, இதற்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா என்ற பாடல் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
இப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், சில்லா சில்லா என்ற வரிகளில் வரும் பாடலை வேறொரு நபரின் குரலில் இப்பாடம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு தான், இயக்குனர் ஹெச். வினோத்துடன் துணிவு பட முதல் சிங்கிலை ரிலீஸ் செய்வது பற்றி ஆலோசனை செய்வதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.