பிக்பாஸ்சீசன் 6 அசல் கோளாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு..
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோலார் அங்கிருக்கும் பெண் போட்டியாளர்களுடன் நெருங்கி பழகியதால் எரிச்சல் அடைந்த ரசிகர்கள் அவரை எலிமினேட் செய்து விட்டனர்.
அதன் பிறகு தற்போது அசல் கோலார் எழுதிய பாடல் வரிகளால் அந்தப் படத்தில் நடித்த வடிவேலு பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ஏனென்றால் 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சினிமாவை விட்டு விலக்கி வைக்கப்பட்டார்.
அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு இந்த ரெட் கார்ட் பிரச்சனை முடிவுக்கு வந்து, மீண்டும் வடிவேலுவை சினிமாவில் நடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு இந்தப் படத்தில் அப்பத்தா என்ற பாடலில் ‘நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். சில நாயால சீக்காளி ஆனேன்’ என்கின்ற பாடலைப் பாடி மீண்டும் இயக்குனர் ஷங்கரை சீண்டிருக்கிறார்.
இந்தப் பாடலை எழுதியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மன்மதன் அசல் கோலார், தற்போது பிரச்சனையை கிளப்பி விட்டு வடிவேலுவை மீண்டும் சினிமாவில் இருந்து ஓரம் கட்ட ஏதுவான சூழ்நிலை உருவாக்கி உள்ளார்.
இதற்கு வடிவேலும் துணை போவது தான் ஆச்சரியம். தன்னை சினிமாவில் நடிக்க விடாமல் ரெட் கார்ட் கொடுக்க வைத்தவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் வடிவேலும் அவர் நடிக்கும் படங்களில் குத்தலான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.
மேலும் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை சுராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, படத்திற்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றி உள்ளனர். வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அப்பத்தா பாடல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது.