'தளபதி 67' படத்தில் விஜய் உடன் கைகோர்க்கும் கமல் ? லோகேஷுக்காக கமல் செய்யப்போகும் உதவி…
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய்தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரிதிவிராஜ், நிவின்பாலி, ஆக்சன் கிங் அர்ஜூன், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் இணைவதால் இந்தப் படம் இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது .இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான ’விக்ரம்’ படத்தை கமல்ஹாசன் நடித்து தயாரித்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் இணை தயாரிப்பாளராக கமல்ஹாசன் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஏற்கனவே 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தயாரிப்பார் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி ’விக்ரம்’ படத்தின் கமல்ஹாசனின் கேரக்டரை ’தளபதி 67’ படத்திலும் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது.