நடிகர் கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!
நடிகர் கமல்ஹாசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வருகிறார். அத்துடன் கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத் சென்ற அவர், அங்கு இயக்குநர் விஸ்வநாத்தைச் சந்தித்தார்.
மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நேற்று மாலை சென்னை திரும்பினார்.
இதனையடுத்து, நேற்று அவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் சென்னை - போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என்றும் வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய ஓய்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கமல்ஹாசன் தரப்பினர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.