1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட சூர்யாவின் திரைப்பட படப்பிடிப்புக்கள் இலங்கையில்!
தமிழகத்தின் முன்னணி திரைப்பட நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 42 என்ற திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள், இலங்கையின் வனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, படிப்பிடிப்புக்குழு விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
1000 ஆண்டுகள் பழமையான கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கவுள்ளார்.
அவர்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் இரண்டு நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியாவை தேர்வு செய்துள்ள நிலையில், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளிலும்; படப்பிடிப்புக்களை மேற்கொள்ள தயாரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் இதில் மூன்று நாடுகளே இறுதியில் படப்பிடிப்புக்களுக்காக தெரிவுசெய்யப்படவுள்ளன.
இந்த திரைப்படம் சூர்யாவின் அதிக நிதிச்செலவிலான திரைப்பட இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, இந்த திரைப்படத்தில் 5 விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது.