கமல்ஹாசன் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள அறிக்கை பிக்பாஸ் என்ன ஆகும்?

Nila
2 years ago
கமல்ஹாசன் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள அறிக்கை பிக்பாஸ் என்ன ஆகும்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் லேசான காய்ச்சல் இருந்ததால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 23ஆம் தேதி லேசான காய்ச்சல் இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது விரைவாக குணமாகி வருகிறார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது என்பதை அறிந்து அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்பாரா? அல்லது மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!