காதலி மஞ்சிமாவை கரம் பிடித்தார் நடிகர் கவுதம் கார்த்திக்...திருமண புகைப்படங்கள் வைரல்!
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று சென்னையில் நடந்ததை அடுத்து இருவரும் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக், ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்தபோது அவருடன் நடித்த நடிகை மஞ்சிமா மோகனுடன் காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த காதல் இருதரப்பு பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், கௌதம் கார்த்திக் - மஞ்சிமா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.