முஸ்லிம் சகோதரிகளுக்கு அசாம் முதலமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

#Muslim
Keerthi
1 year ago
முஸ்லிம் சகோதரிகளுக்கு அசாம் முதலமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். 

ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 

2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பெண் அதிக குழந்

தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். 

பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!