வெளியானது துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு!
Nila
2 years ago

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு". இப்படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் உள்ள போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது.இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இதில் திரைப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடலான "சில்லா சிலா" பாடல் இம் மாதம் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



