திருமணத்திற்கு பிறகு மனைவி ஹன்சிகா குறித்து கணவர் சோஹைல் கதுரியா வெளியிட்ட கருத்து

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. புதுமணத்தம்பதிக்குத் திரையுலகப் பிரபலங்கள் சோசியல் மீடியா மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஹன்சிகாவும் தங்களது திருமணப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதுரியா திருமணம் குறித்து நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் "நானும் அவளும் ஒன்று சேர்ந்த ஒரே ஆத்மாக்களாகினோம். இருவரும் சேர்ந்தே முதுமை காணுவோம்.
சிறந்த தருணங்கள் எங்களுக்காகக் காத்திருக்கிறது. 'நீ வாழும் காலம் வரை நான் வாழ வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது'. உண்மையான காதல் ஒருபோதும் கண்முடித்தனமானதல்ல, அது வாழ்விற்கு வெளிச்சத்தைச் சேர்க்கக்கூடியது" என்று பதிவிட்டுள்ளார்.



