இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை (இ-விசா) வழங்குவதை மீண்டும் ஆரம்பித்த இந்தியா
Prasu
2 years ago

இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை (இ-விசா) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன்படி, ஓய்வு, வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பிற நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கையர்கள், தற்போது மீண்டும் முழுக்க முழுக்க மெய்நிகர் சூழலில் பயண விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது ட்வீட்டில் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பயணிகள் தங்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்க indianvisaonline.gov.in/evisa/tvoa.html;பார்வையிடுமாறு ,இலங்கை கள் பிரஜை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



