உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அழகுடன் நோயின்றி வாழலாம்.

#Health #herbs #Benefits
உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அழகுடன் நோயின்றி வாழலாம்.

உங்கள் பாதங்களில் ஏதும் பிரச்சினை இருந்தால் சில சமயம் காலில் நெருப்பை வைத்தது போல் இருக்கும். மேலும், கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறி.

பின் அந்த பகுதிகளில் உணர்ச்சி குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கும்,  பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை அதிகம் வருகிறது.

மதுப்பழக்கம் இருந்தாலும் காற்பாதங்களில் நரம்பு மண்டல பாதிப்பினால் பிரச்சினை வரலாம்.

அதுபோன்று ‘ஹைப்போ தைராய்டிசம்’ இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.

மருதாணியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம்செய்து வந்தால் பாதஎரிச்சல் குறையும்.

மஞ்சள் கால், மற்றும் பாதங்களில் புசி வந்தால் அதாவது, 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து குழைத்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இறுதியாக நரம்பு சார்ந்த பிரச்னைகளாலும் பாத எரிச்சல் ஏற்படும். எனவே, தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!