இஸ்லாமியர்கள் பன்றியிறைச்சியை விரும்பாததன் காரணம் என்ன தெரியுமா?

#spiritual #Food #Muslim
இஸ்லாமியர்கள் பன்றியிறைச்சியை விரும்பாததன் காரணம் என்ன தெரியுமா?

இஸ்லாம் வாழ்க்கை நெறியானது. மனிதனுக்கு ஏற்ற மார்க்கமாக அவனது உடல், ஆன்மிகத் தேவை, மனநிலை அனைத்துக்கும் பொருத்தமான அமைப்பில்  அமைந்திருக்கிறது.

இறைவன் நம்மைப் படைத்தது அவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை வணங்கி வாழவே. தவிர நம்மை வீணான, பாதுகாப்பற்ற உலகில் விட்டுவிடவில்லை.அவன் நமக்கு வழிகாட்டியான வேதத்தை, குர்ஆனாக வழங்கினான்.

ஒரு முஸ்லிம், அவர் ஆணோ பெண்ணோ தமது வாழ்க்கையைத் தமது இறைவனின் திருப்திக்காகச் செலவிட வேண்டும். அவனது கட்டளைகள், சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் பன்றி இறைச்சியையும் அதில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் சாப்பிடாமல் இருப்பதாகும்.

 பன்றி இறைச்சியில் அப்படி என்னதான் தீங்கு இருக்கிறது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். பன்றியிறைச்சியானது அதிலிருந்து உருவாகும் பாராசைட்ஸ் நோய்களை அறிய வருகிற எவரும் அதை உண்ண வேண்டாம் என்றே கூறுவர்.

முஸ்லிம்கள் ஏன் பன்றி சாப்பிடுவதில்லை என்பது இரண்டாந்தர விஷயமாகவே இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை அதைச் சாப்பிடக் கூடாது என்பது இறைவனின் கட்டளை. அவன் தடைவிதித்துள்ளான். 

இறைவன் தூய்மையான விஷயங்கள் அனைத்தையும் நமக்கு அனுமதித்துள்ள வேளை. அவற்றைக் கொண்டு நாம் மகிழலாம். எந்த விஷயங்கள் நமது நம்பிக்கைகள், ஆரோக்கியம், குணநலன்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமோ அவற்றைத் தடைசெய்துள்ளான் இறைவன்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!