தமிழகத்தில் நடமாடும் தகன சாலை அறிமுகம்

Kanimoli
1 year ago
தமிழகத்தில் நடமாடும் தகன சாலை அறிமுகம்

தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் தகன சாலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு மின் மயானம் சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் தகன சாலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உடலை தகனம் செய்வதற்கு விறகு அல்லது சாண வரட்டி பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு 15,000 ரூபா வரை செலவாகும் அதேவேளை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தேவைப்படும்.

எனினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் உடல்களை எரியூட்டி, இறந்தவரின் குடும்பத்திற்கு அஸ்தியை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகன வாகனம், நோயாளர் காவு வண்டிகள் மூலம் உரிய இடங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
எரிவாயுவை பயன்படுத்தி மட்டுமே இதனூடாக தகனம் செய்யப்படுகிறது.

இந்த வாகனம் குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி உடல்கள் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை எரியூட்ட 7,500 ரூபா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது