அதிகம் பாப்கோன் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியாயின் உங்கள் கவனத்திற்கு.....

#Health #Food #Benefits
அதிகம் பாப்கோன் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியாயின் உங்கள் கவனத்திற்கு.....

எல்லா வயதினருமே விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா..? மக்காச்சோளம்தான் பாப்கார்னாக மாறுகிறது. இது ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று.

சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே இருக்கும். இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும்.

குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். அதே வேளை இது ஒவ்வாமை அற்றதொன்றாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம்.

இந்த மக்காச்சோளம் பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள திண்பண்டங்கள் கிடைக்கின்றன. மேலும் இது வர்ணங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு ரெயின்போ பாப்கோன் என்றும் கிடைக்கின்றன.

இதில் சாதாரண மரக்கறி மற்றும் பழங்களைப்போன்று எதிர்ப்புச்சக்தி காணப்படுகிறது.

உலக நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கேயே அதிக நுகர்வும் காணப்படுகின்றது.

 குழந்தைகளின் பசி போக்கவும், நார்ச்சத்து தேவையை ஈடுகட்டவும் மக்காச்சோளம் உதவும்.

ஆரோக்கியமான மக்காச்சோளத்தை ருசித்து நலம் பெறுவோம். ஆனால் ஞாபகமிருக்கட்டும் அளவுக்கு மிஞ்சினால் எதுமே தீங்கு தான்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!