நீங்கள் சைவ உணவுப்பிரியரா? உங்கள் கவனத்திற்கு 5 முக்கிய அம்சங்கள்....

#Health #meal
நீங்கள் சைவ உணவுப்பிரியரா? உங்கள் கவனத்திற்கு 5 முக்கிய அம்சங்கள்....

சைவ உணவை மாத்திரம் அதிகளவில் உட்கொள்பவர்கள் தமது ஊட்டச்சத்து குறித்து மிகவும் கவனமாக இருக்க இந்த 5 அம்சங்களையும் கவனிக்கவும்.

1.உலர் பழங்கள்: உலர்பழங்களில் இரும்புச்சத்தே அதிகம் ஊட்டப்பொருளாக காணப்படும். மேலும் அவற்றுள் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. எனவே உலர் பழங்களை தினமும் இவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். சாலட்டிலோ, சிற்றுண்டியிலோ சேர்த்து ருசிக்கலாம்.

2. பச்சை இலை காய்கறிகள்: இதிலும் இரும்பு சத்து நிரம்பி இருக்கிறது. வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியத்துடன் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கியமாக கீரைவகைகளில் உள்ளன.


3. முழு தானியங்கள்: துத்தநாகம், நார்ச்சத்து இவை இரண்டும் நீங்கள் முழு தானியங்களை உடகொள்ளல் மூலம் அடைந்து கொள்ளலாம். இவை உடலில் கொழுப்பு சேர்வதை எதிர்த்து போராடவும் உதவும். பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.


4. பருப்பு: இரும்பு சத்தும் அதிகம் கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடுவது வாயு பிரச்சினையை உருவாக்காது.

5. பீன்ஸ்: இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதிலுள்ள நார்ச்சத்தும் அதிகம்  உடலில் கொழுப்பை எதிர்த்து போராட உதவும். அத்துடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் பீன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!