இரவில் எளிதாக நித்திரைக்குச் செல்வதற்கான உணவுப்பழக்கவழக்கங்கள்...
இரவில் நீங்கள் நித்திரை கொள்ள கஷ்டப்படுபவராயின் நீங்கள் இராப்போசனத்தில் சிறிது நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றினால் அவை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
மாலையில் கோப்பி மற்றும் தேனீர் அருந்துவதை மட்டுப்படுத்தினால் அல்லது தவிர்த்தால் நித்திரைக்கு செல்ல இலகுவாக இருக்கும். நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு சாக்லேட், குளிர்பானம் மற்றும் எனர்ஜி பானங்களை கூட தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பே அவைகளை தவிர்க்க வேண்டும்” என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
*தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக குறைந்தது ஐந்து வேளையாக பிரித்து உண்ண வேண்டும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு தூக்கத்தையும் மேம்படுத்தும். ”நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் இரண்டு மணி நேர இடைவேளையில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
அப்படி செய்தால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். எடை குறைப்பு, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். இரவில் அதிகமாகவோ அல்லது அசைவ உணவுகளை அதிகம் பயன்படுத்தாமலோ இருந்தாலும் துாக்கம் வரும். தூங்க செல்வதற்கு முன்பு வயிறு நிரம்ப சாப்பிடுவது அஜீரணம், வீக்கம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும். இரவில் நிம்மதியாக தூங்க விடாமல் தடுக்கும்” என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
*இரவு உணவில் சேர்க்கப்படும் காய் கறிகள், இறைச்சிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். “முட்டைக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதே வேளையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரவு உணவுக்கு சிறந்த தேர்வாகும். மேலும், இரவில் பால் குடிக்கலாம். அதில் இருக்கும் புரதம் இரவு தூக்கத்திற்கு நலம் சேர்க்கும்” என்கிறார்கள் டாக்டர்கள்.