பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

Prasu
1 year ago
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் மது விலக்கு கொள்கை அமலில் இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கள்ளச்சாராயம் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. பொலிஸாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் இந்த மது விலக்கு கொள்கையால் அடிக்கடி கள்ளச்சாராயத்தை குடித்து பலரும் உயிரிழந்து வரும் நிகழ்வும் நடக்கிறது.

புதிதாக சப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாள்களாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் நிதிஷ் குமார், ``கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை குடித்தால் இறந்துதான் போவார்கள். மது விலக்கு அமலில் இல்லாத மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழக்கத்தான் செய்கின்றனர்.

புதிதாக சப்ரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாள்களாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.