மழைக்காலத்தில் வீட்டில் மின்சாரப் பாவனைகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
#Health
#Rain
#Home
Mugunthan Mugunthan
1 year ago
இலங்கையில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்விபத்துகளை எப்படி நாம் தடுக்கலாம்? என்பது குறித்து சற்று நோக்குவோம்.
- வீட்டில் உள்ள மற்றும் வெளியேயான மின்கம்பங்களில் பந்தல், கொடி, விலங்கினங்கள் ஆகியவற்றை கட்டக்கூடாது. மரக்களைகள் கம்பிகளில் படுமாயின் அவற்றை மின்சார சபை ஊழியர்களைக் கொண்டு வெட்ட வேண்டும்.
- மழைக்காலத்தில் நீர் நிலைகள் உள்ள இடங்களில் நிற்க கூடாது . மேலும் மின்சாரக் கம்பி அறுந்திருப்பின் தொடக்கூடாது. மாறாக மின்சார சபைக்கு அறிவிக்க வேண்டும்.
- மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் இத்தகைய மின் சாதனங்களின் இணைப்பு வயரை பிளக்கிலிருந்து அகற்றி வைக்கவேண்டும்.
- வீட்டில் மின் ஒழுக்குகள் ஏதும் இருந்தால் அதனை திருத்துவதற்கு தகுதியான திருத்துனர் உதவியை அல்லது இறப்பர் செருப்பணிந்து திருத்த அறிவு இருந்தால் மாத்திரம் திருத்த வேண்டும். மீற்றர் மானிகளுடனான பகுதியில் ஏதும் சிக்கலிருப்பின் மின்சார சபையை நாடவேண்டும்.
- பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும்.
- குளியலறைகளில் தண்ணீர் படக்கூடியவாறு மின்னை இணைக்க கூடாது. மேலும் மின் சாதனங்களான மின் அழுத்தி மற்றும் ஏனைய மின் உபகரணங்களை நீர் படக்கூடியவாறோ அல்லது அதன் ஆளி நிறுத்தப்பட்டிருக்கும் வேளையில் அதனை செயற்படுத்துவது சிறந்தது.
- கிரைண்டர் இயந்திரங்களை இயக்கமுன் அதன் ஏர்த் இணைக்கப்பட்டிருத்தலை உறுதி செய்து கொள்ள வேண்டும். மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது. உடைந்த அல்லது பழுதான சுவிட்ச், பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டும்.
- மேலும் மின்சார சபையினரின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நீங்கள் வீட்டின் மின் பாவனையை உபயோகப்படுத்திக் கொள்ளல் அவசியம்.