நாவல் பழம் மற்றும் மரத்தின் பயன்களை அறிவீர்களா......?

#Health #Fruits #Benefits
நாவல் பழம் மற்றும் மரத்தின் பயன்களை அறிவீர்களா......?

நாவல் மரத்தின் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு) ஆகும். மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை.

  • நாவற்பழத்தின் விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும்.
  • இது ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மேலும் உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்;  பித்தத்தையும் போக்கும்.
  • நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். அத்துடன், மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். 
  • இது ஒரு நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும்.
  • விஞ்ஞானத்தில் வளி மாசுபடுதலையும் முக்கியமாக வாகன புகை மாசை துாய்மையாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது. எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வரவேற்கத்தக்கது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!