எல்லை மோதல்கள் காரணமாக சீன பொருட்களை வாங்க மறுக்கும் 60 சதவீத இந்தியர்கள்

#China #India
Prasu
1 year ago
எல்லை மோதல்கள் காரணமாக சீன பொருட்களை வாங்க மறுக்கும் 60 சதவீத இந்தியர்கள்

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். 

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 

இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர். 

சீன பொருட்களுக்கு பதிலாக 11 சதவீதம் பேர் தரமான இந்திய பொருட்களையும், 8 சதவீதம் பேர் மற்ற வெளிநாட்டு பொருட்களையும் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். 

குறைந்த விலை, தரம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட காரணங்களை கொண்டு மற்ற நாட்டு பொருட்களை இந்தியர்கள் வாங்குவது தெரியவந்துள்ளது. 

மேலும் சிலர் சீன பொருட்கள் கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைப்பதில்லை என்று கூறி உள்ளனர். சீன பொருட்களை வாங்க மறுப்பதற்கு எல்லையில் சீன படைகளுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதும் ஒரு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

அதற்கு பதிலாக இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் உணர்வு அதிகரித்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!