ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது எவ்வகையில் ஆரோக்கியம் தெரியுமா?

#Health #water
ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது எவ்வகையில் ஆரோக்கியம் தெரியுமா?

இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் படி ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும், நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாவதையும் தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.

அதில் குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இது உடலிற்கு சிறந்த உடற்பயிற்சியும் கூடவாகும். 

குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும்போது நீரின் சுழற்சி வெளிப்பாடும், உடல் அசைவும் ஒருங்கே அமையப்பெறுகிறது. அந்த சமயத்தில் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் போட்டி அல்லது பயிற்சிக்கு பிறகு தசைகளில் வலியை எதிர்கொள்வார்கள். சோர்வும் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவது உடல் வலியை குறைக்கவும் உதவும். தசைகளை தளர்வடைய செய்து சோர்வையும் போக்கும். குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.

நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. குளிர் காலங்களில் குளிர்நீரில் நீச்சல் அடிக்கும் போது உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், நீச்சல் வீரர்கள் அல்லாதவர்களின் உடலில் இன்சுலின் செறிவுகள் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக கடும் குளிரை தரவல்ல பனிக்கட்டி நீர்நிலைகளில் நீச்சல் அடிப்பது ஆபத்தானதாகும்.

அதிக குளிர்ச்சி உடல் வெப்ப நிலையை குறைத்துவிடும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை மோசமாக்கிவிடும்.  உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சிரமப்படுபவர்கள் குளிர்ந்த நீரில் நீராட முயற்சிக்கலாம்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!