விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ஆயுட்காலம் நீடிக்குமா?

#Health #Fruits
விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ஆயுட்காலம் நீடிக்குமா?

விளாம்பழங்கள் மாரிகாலங்களில் அதிகம் கிடைக்கும். இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சிதரும் இந்த விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..?

விளாம் காயை தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். பனங்கற்கண்டுடன் சேர்த்தும் சுவைக்கலாம். கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும்.

ஓடு போல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுத்துகிறது.

புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்-ஏ உள்ளிட்ட சத்துக்களும், இதில் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.

குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி-2 உயிர்சத்தும் உள்ளது

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!