நாம் மென்று துப்பும் வெற்றிலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

#Health #herbs #Benefits
நாம் மென்று துப்பும் வெற்றிலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

நம் நாட்டை பொறுத்தவரை வெற்றிலை  ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் பயன்படும் ஒரு மூலிகை இலையாகும். இந்த வெற்றிலை, மருத்துவ குணம் கொண்ட பொருள் மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட.

இந்த வெற்றிலை மீக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கலிங்கத்து பரணி, கம்பராமா யணம் என வெற்றிலை இடம்பெற்றிருக்கும் நூல்களின் பட்டியல் வெகு நீளம்.

அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும். இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது.

இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.
நீர்ச்சத்தும் நிரம்பப்பெற்றது. வைட்டமின் சி, கரோட்டீன், புரத சத்தும் நிரம்பியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப் படுத்தி கெட்டக் கொழுப்பை வெளியேற்றக் கூடியது. ஆயுர்வேத மருந்துகள் பலவற்றில் வெற்றிலை இடம் பிடித்திருக்கிறது.

தீக்காயம்:

வெற்றிலை குளிர்ச்சி யானது. தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.

பல் சொத்தை:

வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.

துர்நாற்றம்:

வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு வயிற்றில் நுண்கிருமிகள் இருப்பதுதான் காரணம். வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.

எரிச்சல்:

தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி, எரிச்சல் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக வெற்றிலை விளங்குகிறது.

10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம்.

குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும். இதில் ஆண்டி இன்ப்ளேமேட்ரி, ஆண்டி பேக்டீரியல் போன்ற பண்புகள் உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!