ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் கடவுசீட்டை அவரிடமே ஒப்படைத்த இந்திய புலனாய்வு அதிகாரிகள்

Prasu
1 year ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் கடவுசீட்டை அவரிடமே ஒப்படைத்த இந்திய புலனாய்வு அதிகாரிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனிடம் இருந்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்த கடவுச்சீட்டு, மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிகாரிகள், அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தனர்.இந்த கடவுச்சீட்டு, சென்னை அமர்வு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் ; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனைப் பெற்ற சாந்தன் உட்பட்ட 6 பேரையும் இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

எனினும் விடுதலையான சாந்தன், தனது கடவுச்சீட்டு, 1995-ம் ஆண்டே காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிப்பதற்காக திருப்பி தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தங்கமாரியப்பன் முன்னால் இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்சி முகாமில் இருந்த சாந்தன் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது,  சாந்தனின் பெயர் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்னர் கடவுச்சீட்டை திருப்பி கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றுக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் குறித்த கடவுச்சீட்டை தாக்கல் செய்யவேண்டும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டார்