தினம் நீங்கள் எடுக்கும் உப்பின் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழும் முறைகள்.

#Health #meal
தினம் நீங்கள் எடுக்கும் உப்பின் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழும் முறைகள்.

உப்பில்லாப் பண்டம் குப்பையில் என்பர். ஆம் உப்பு உணவிற்கு உருசிக்கு அவசியம் தான். இருப்பினும் அதனை நாம் ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. 

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

மேலும் சமையலுக்கு கட்டி உப்பைப் பயன்படுத்தாது, துாள் உப்பை பயன்படுத்துதல் மிகவும் கண்ணியமாகவும் இலகுவாக நிறையை கட்டுப்படுத்தி தற்போது உப்பு விற்கும் விலையை மட்டுப்படுத்தவும் கூடியதாக இருக்கும்.

ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!