வியக்க வைக்கும் அவதார் 2 வசூல் நிலவரம்..

Prabha Praneetha
1 year ago
வியக்க வைக்கும் அவதார் 2 வசூல் நிலவரம்..

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அவதார்.

முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் வசூலிலும் மிகப்பெரிய வேட்டை நடத்தியது.

படம் முழுக்க கற்பனை காட்சிகளுடன் பார்ப்பவர்களை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றது இந்த படம்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். முதல் பாகத்தை காடுகளில் நடப்பது போல் எடுத்திருந்த இயக்குனர், இரண்டாம் பாகத்தை நீருக்கு அடியில் நடப்பது போல் 3D அனிமேஷன் தொழில் நுட்பத்துடன் எடுத்திருந்தார். அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, முதல் பாகத்தின் தாக்கத்தினால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. படம் வெளியான முதல் நாளே 41 கோடி வசூல் செய்தது. இதற்கு முன்பே ரிலீஸ் ஆன எண்ட்கேம் 53 கோடி செய்தது. இப்போது இந்த படம் 41 கோடி வசூல் செய்து இந்தியாவின் இரண்டாவது ஹாலிவுட் ஓப்பனர் திரைப்படம் ஆகி இருக்கிறது.

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், சனிக்கிழமை 41 கோடி, ஞாயிற்றுகிழமை 47 கோடி, திங்கள் கிழமை 18.5 கோடி, செவ்வாய்கிழமை ரூ.16.5 கோடி, புதன்கிழமை ரூ.15 கோடி, வியாழன் அன்று ரூ.14 கோடி வசூல் செய்திருக்கிறது. மேலும் இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகளவில் 4,200 கோடி வசூலை வாரி இருக்கிறது.

வசூலை தாண்டி விட்டது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம், இன்பினிட்டி வார் படங்களை தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய வசூலை செய்த படங்களில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

வார இறுதி நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் முதல் நாள் விமர்சனம் சற்று மந்தமாகவே இருந்தது. மேலும் இந்த படம் நிறவெறிக்கு எதிரானது என்று கூட எதிர்ப்புகள் கிளம்பின. இதையெல்லாம் தாண்டி இப்போது இந்த படம் வெற்றியடைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!