காலையில் உணவு உட்கொண்டதும் குளித்தால் உடலுக்கு கேடு விளையுமா?

#ஆரோக்கியம் #உணவு #குளிப்பு #உடல் #சிறப்பு #Health #meal #Body #morning #Healthy
காலையில் உணவு உட்கொண்டதும் குளித்தால் உடலுக்கு கேடு விளையுமா?

பொதுவாக காலையில் எழுந்தவுடன் குளிப்பது வழக்கம். இதற்கு மாறாக சிலர் காலை உணவை உட்கொண்ட பின்னரே குளிக்கச் செல்கின்றனர். இது உடலுக்கும் மற்றும் ஒரு நல்ல பழக்கமாகவும் இல்லை. 

சாப்பிட்டதும் செரிமானம் நடைபெறுவதற்கு உடல் ஒத்துழைக்கவேண்டும். அந்த நேரத்தில் குளித்தால் செரிமானம் மந்தமாகிவிடும். அதனால் குடலில் உணவு அப்படியே தங்கி விடும். மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். உடலும் சோர்வுக்குள்ளாகும்.

குளிப்பதென்றால் உணவின் பின் குறைந்தது இரண்டு மணி இடைவெளி தேவை என ஆயுள்வேதம் கூறுகிறது. சாப்பிடும்போது, செரிமானத்திற்கு பயனுள்ள வகையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், சாப்பிட்ட உடனே குளிக்கும்போது, உடல் வெப்பநிலை குறைந்து, செரிமானத்தை மந்தமாக்கிவிடும் என்று குறிப்பிடுகிறது

விஞ்ஞான மருத்துவமும் இதனை ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறு உணவின் பின்னர் குளித்தால் உடல் வெப்பநிலை குறைந்து குருதிச் சுற்றோட்டம் மாறுபடுகிறது.

இதன் விளைவாக, செரிமானத்திற்கு உதவும் ரத்தம், வெப்பநிலையை பராமரிக்க சருமத்தை நோக்கி பாய ஆரம்பிக்கிறது. இதனால் செரிமான செயல்பாடு தாமதமாகி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரும்’ என்று கூறுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு குளிப்பதுதான் உடலுக்கு நல்லது. எனவே இனிமேல் இவ்வாறான செயலில் ஈடுபடுவதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!