சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி

#India #China #Corona Virus #Covid 19
Prasu
2 years ago
சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு வெளிநாட்டவருக்கு  கொரோனா தொற்று உறுதி

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், சீனாவில் இருந்து வந்த தாய் மற்றும் குழந்தை என 2 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் விமானத்தில் வந்த 67 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!