அம்மாவின் பெயரை காப்பாற்ற தவறிய 5 நடிகைகள் யார்?

Kanimoli
1 year ago
அம்மாவின் பெயரை காப்பாற்ற தவறிய 5 நடிகைகள் யார்?

சினிமாவில் வாரிசு நடிகைகள் வருவது சாதாரண விஷயம் தான். அப்படி பிரபல நடிகைகளின் மகள்களும் சினிமாவில் எளிதில் நுழைந்துள்ளனர். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும். அவ்வாறு அம்மாவின் பெயரை காப்பாற்ற தவறிய 5 நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஸ்ரீதேவி, ஜான்வி கபூர் : தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டிலும் தனக்கான முத்திரையை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகளான ஜான்வி கபூரும் தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். ஆனால் அவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர் தோல்வியை தழுவி வருகிறது. ஆகையால் தற்போது தனது அம்மாவின் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

மேக்னா, கீர்த்தி சுரேஷ் : ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்த மேக்னா. இவருடைய வாரிசான கீர்த்தி சுரேஷும் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக இவருடைய படங்கள் எதுவும் வெற்றி பெறாத காரணத்தினால் மார்க்கெட்டை இழந்துள்ளார்.

பூர்ணிமா, சரண்யா : இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மனைவியும் மற்றும் நடிகையுமான பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார். அவருடைய மகன் மற்றும் மகள் இருவருமே சினிமாவில் நுழைந்துள்ளனர். இதில் சரண்யா பாக்யராஜ் ஒரு சில படங்களுக்குப் பின்பு சினிமாவை விட்டே விலகி விட்டார்.

லட்சுமி, ஐஸ்வர்யா : எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி ரஜினி, கமல் ஆகியோருக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை லட்சுமி. அதன் பின்பும் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படி இருக்கையில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தனது அம்மாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை.

ராதா, கார்த்திகா : சினிமாவில் டாப் நடிகர்களும் ஜோடியாக நடித்தவர் தான் ராதா. இன்றும் அவரது பெயர் சினிமாவில் நிலைத்து நிற்கிறது. ஆனால் அவருடைய மகள் கார்த்திகா மற்றும் துளசி இருவருமே சினிமா நடிகைகளாக உள்ளனர். இவர்கள் இருவருமே அம்மாவின் பெயரைச் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு விஷயத்தை தற்போது வரை செய்யவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!