வாரிசு படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுனில் பாபு திடீர் மரணம்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த சுனில் பாபு காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
'துப்பாக்கி', 'எம்.எஸ்.தோனி', 'சீதா ராமம்', 'பெங்களூர் டேஸ்' என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்தார்.
இந்நிலையில், சுனில் பாபு மாரடைப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுனில் பாபுவை புகழ்ந்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்



