தமனால் விஜய்க்கு வந்த அடுத்த பிரச்சனை

Kanimoli
1 year ago
தமனால் விஜய்க்கு வந்த அடுத்த பிரச்சனை

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனாலும் இந்த படத்துக்கான பஞ்சாயத்து மட்டும் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஷூட்டிங், இசை வெளியீட்டு விழா ஆகியவற்றால் அதிருப்தியில் இருந்த விஜய் தற்போது இசையமைப்பாளர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

இதற்கு முக்கிய காரணம் வாரிசு திரைப்படம் தற்போது வெளிநாடுகளில் குறித்த நேரத்தில் வெளியாகுமா ஆகாதா என்ற சந்தேகம் தான். ஏனென்றால் படத்தில் இசை சம்பந்தப்பட்ட பணிகள் எதிர்பார்த்ததை விட தாமதமான காரணத்தால் இப்போது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சென்சார் வேலைகள் முடியவில்லையாம்.

இதனால் வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்வதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று ஆந்திராவிலும் வெளியிடுவதற்கு தாமதம் ஆகும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமன் செய்த குளறுபடியால் வாரிசு படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகாமல் நான்காம் தேதி வெளியானது.

இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது விஜய்யை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் சற்று கலக்கமடைய வைத்திருக்கிறது. ஏனென்றால் இந்தப் பிரச்சனை படத்தின் வசூலை நிச்சயமாக பாதிக்கும். அதிலும் விஜய்க்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. அதனாலேயே வாரிசு திரைப்படம் அங்கு நல்ல விலைக்கும் வியாபாரமானது.

அதேபோன்று வெளிநாடுகளில் வசிக்கும் விஜய் ரசிகர்களும் இப்படத்தை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டால் இது விஜய் நடிக்கும் அடுத்த படத்தையும் நிச்சயம் பாதிக்கும். வாரிசு திரைப்படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கான வியாபாரம் சூட்டிங் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே களைகட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது விஜய்யை ரொம்பவும் கோபப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவர் இந்த படத்தில் நடிக்க எதற்காக சம்மதித்தோம் என்று நொந்து போயிருக்கும் வேளையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து அவரை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!