சோசியல் மீடியாவை தெறிக்க விடும் வாரிசு

Kanimoli
1 year ago
 சோசியல் மீடியாவை தெறிக்க விடும் வாரிசு


பொங்கல் ட்ரீட்டாக இன்று ரிலீஸ் ஆன விஜய்யின் வாரிசு படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதுகிறது. இதனால் படத்தைப் பார்த்த பலரும் ட்விட்டரில் வாரிசு படத்தை குறித்து அனல் பறக்கும் விமர்சனங்களை பதிவிடுகின்றனர்

எப்போதுமே விஜய்யை மாஸ் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு அவரை சென்டிமென்ட் நாயகனாக வாரிசு காண்பித்தருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப விஜய்யின் நடிப்பை வாரிசில் காண முடிந்தது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை உருக்கியது.

தெலுங்கு இயக்குனர் வம்சி-க்கு என்று தனி ரசிகர்கள் இருப்பதால் கோலிவுட்டில் அவர், இன்று கொண்டிருக்கும் வாரிசு படம் எந்தவித காம்ப்ரமைசும் இல்லாமல் படத்தை பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருக்கிறார். பல இடங்களில் ரசிகர்களை ப்ரீஸ் செய்த வாரிசு படத்தின் முதல் பாதி பக்க என்டர்டைன்மென்ட் ஆகவும், இரண்டாம் பாதி விஜய்யின் தர்மயுத்தத்தையும் காட்டியது.

நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் தான் என்றும் குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய படம் தான் வாரிசு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வாரிசு விஜய்யின் ஒன் மார்க் ஷோ. இந்த படம் பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஷோ. மேலும் படத்திற்கு வசனம் எழுதி இருக்கும் விவேக், மெட்டி ஒலி மற்றும் மாமா குட்டி ஐடியாக்களை பயன்படுத்தி 2k கிட்ஸ்கள் விரும்பும் வகையில் வசனம் எழுதியுள்ளார். இதனால் விவேக்கின் பங்களிப்பும் வாரிசு படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

மேலும் வாரிசு படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அல்டிமேட் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் இடம் பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் மற்றும் விஜய்யின் வாய்ஸ் மாடுலேஷன், காமெடி டைமிங் அனைத்தும் ரசிகர்களை திரையரங்கில் துள்ளி குதிக்க வைத்தது.

எனவே இன்று அதிகாலை ரிலீஸ் ஆன வாரிசு படத்திற்கு சோசியல் மீடியாவில் பாசிட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்களும் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் வாரிசு படத்தை பொங்கல் பண்டிகையுடன் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!