இந்திய மத்திய பிரதேச கடக்நாத் கோழியிறைச்சியினால் நரம்புத்தளர்ச்சியை சீராக்கலாமா?

#ஆரோக்கியம் #நரம்பு #குணப்படுத்தல் #Health #Nerves #Treatment
இந்திய மத்திய பிரதேச கடக்நாத் கோழியிறைச்சியினால் நரம்புத்தளர்ச்சியை சீராக்கலாமா?

கடக்நாத் சிக்கன்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம் என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை என்பதால், இதை ‘காளி மாசி’ (காளியின் தங்கை) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இந்தக் கோழிகளில் மெலனின் எனும் பொருள் அதிகமாக காணப்படுவதால் இதன் நிறம் அவ்வாறு காணப்படுகிறதென்றும் யுனானி வைத்திய முறையில் இவை அதிகம் மருத்துவ குணம் கொண்டது.

இந்தக்கோழியறைச்சியை உண்பதால் இதனின் மெலனின் படை காரணமாக நரம்புகள் விரித்தியடைந்து நரம்புத்தளர்ச்சியிலிருந்து விடுபட உதவும். மேலும் இதன் கொழுப்பும் தரமானதாகும் என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாட்டுக்கோழிகளைப்போன்றே இதன் இறைச்சியும் ஆரோக்கியமானது. ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகளுக்கும் இது சிறந்தது.

மத்தியப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.

முட்டைகள்

கடக்நாத் கோழியின் முட்டைகள் மற்ற கோழி முட்டைகளை போலவே  இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.  மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. 

‘‘இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இந்தக்கோழிகளுக்கு  செயற்கையான தீவனங்களோ, ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் ஊசிகளோ  போடுவது இல்லை. முழுக்க முழுக்க ஆரோக்கியமான, ஆர்கானிக் முறையில் இவற்றை அங்குள்ள சில பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.

இந்த கோழியைப்பற்றி இந்தியாவில் உள்ள கோழிகள் ஆராய்ச்சி மையத்தில் வினவப்பட்ட போது இவை எந்த அளவுக்கு மற்ற நாட்டுக்கோழிகளைவிட சிறப்பான மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதற்கு போதுமான நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனால், நாட்டுக்கோழி என்ற அளவில் இதன் ஒயிட் மீட் உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இதன் முட்டைகளையும் நாம் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்களிடம் ஒரு தயக்கம் உள்ளது. ஆனால், இதுபோன்ற தயக்கங்கள் தேவை இல்லை. இந்தக் கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை” 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!