இதுவரை இல்லாத அளவு வட இந்தியாவில் - 4 டிகிரி குளிர் அலை
வட இந்தியாவில் வெப்பநிலை இந்த வாரம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தாலும், ஜனவரி 2023 இல் இன்னும் குளிர் அதிகரிக்ககூடும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்,
இந்த வார இறுதியில் இருந்து வட இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவு குளிர் நிலவும் என்று எச்சரிக்கைகளும், முன்னறிவிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன.
ஜனவரி 14 மற்றும் 19 க்கு இடையில் கடுமையான குளிர் ஏற்படும் என்றும், அதில், குறிப்பாக ஜனவரி 16 முதல் 18 வரை குளிர் உச்சத்தில் இருக்கும் என்று ஆன்லைன் வானிலை தளமான லைவ் வெதர் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் நவ்தீப் தஹியா ட்வீட் செய்துள்ளார்.
தேசிய தலைநகரில் நேற்று லேசான மழைப்பொழிவு ஏற்பட்டது, கடும் குளிரை சில நாட்களுக்கு குறைத்தாலும், டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளில் குளிர் நிலைமை மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது.