கமல் படத்தில் அந்தரங்க காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால் வாய்ப்பை தவறவிட்ட நடிகை

Kanimoli
1 year ago
கமல் படத்தில் அந்தரங்க காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால் வாய்ப்பை தவறவிட்ட நடிகை

உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் எப்போதுமே சில மோசமான காட்சிகள் இடம் பெறுவது வழக்கம்தான். அதுவும் 80, 90களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பார். அதனாலயே கமல் அப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆனாலும் கமல் படத்தில் நடித்தால் அப்போது ஒரு அந்தஸ்து தான்.

அதனால் முன்னணி நடிகைகள் கமல் படத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வந்தனர். ஆனால் அப்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஒரு நடிகைக்கு கமல் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்தப் படத்தில் பலான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம்.

அந்த படம் வெளியான பிறகு இந்த கேரக்டரையா தவறவிட்டு விட்டோம் என்று மிகுந்த மன வருத்தத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது சின்னத்திரை தொடர்களின் வில்லி கதாபாத்திரம் என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருவது நடிகை தேவி பிரியா தான். அதிலும் ராதிகாவின் செல்வி தொடரில் இவரது வில்லி கதாபாத்திரம் அபாரம்.

தேவிப்பிரியாவுக்கு நடிப்பு திறமை இருந்தும் வெள்ளி திரையில் ஜொலிக்க முடியாததன் காரணத்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மகாநதி படத்தில் தேவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதாவது கமலின் மூத்த மகளாக முதலில் இவருக்கு தான் வாய்ப்பு வந்தது.

ஆனால் அந்த படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி இருக்கும் என்று இயக்குனர் கூறியதால் இந்த பட வாய்ப்பை மறுத்து விட்டாராம். அதன் பின்பு தான் இந்தப் படம் எவ்வளவு பெரிய வாய்ப்பு, இதைத் தவற விட்டு விட்டோமே என்று வருந்தியதாக தேவி பிரியா வருத்தத்துடன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படி வெள்ளித்திரையில் தனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் தனக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். இதுவே நான் சாதித்ததாக எண்ணி திருப்தி அடைந்ததாக தேவிப்பிரியா கூறியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!