சர்வதேச மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி: கேரளாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது விமர்சனங்கள்
நடந்து முடிந்த இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான சர்வதேச மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியின்போது, பார்வையாளர்கள் குறைவான எண்ணிக்கையில் வந்தமை தொடர்பில் கேரளாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
போட்டிக்கான அனுமதிக்; கட்டணங்கள் அதிகமாக இருந்தமை தொடர்பில் முன்னதாக எதிர்க்கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
எனினும், பணம் இல்லாதவர்கள், போட்டியை பார்க்க செல்ல தேவையில்லை என கேரளாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், நேற்று போட்டியின்போது, குறைந்தளவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இதனையடுத்து, அமைச்சரின் கட்டண அதிகரிப்பு தீர்மானம் மற்றும் பார்வையாளர்கள் மலினப்படுத்தும் கருத்துக் காரணமாகவே பாரவையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.