துணிவு படத்திற்கு கிடைத்த விமர்சனத்தினால் அதிக காட்சிகள் ஒதுக்கும் திரையரங்குகள்.

Kanimoli
1 year ago
துணிவு படத்திற்கு கிடைத்த விமர்சனத்தினால் அதிக காட்சிகள் ஒதுக்கும் திரையரங்குகள்.

டாப் ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்யின் கடைசி படங்கள் சரியாக போகாத காரணத்தினால் இந்த பொங்கலுக்கு வெளியான துணிவு மற்றும் வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதேபோல் ஜனவரி 11ஆம் தேதி 2 படங்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது.

பொதுவாக தமிழ் சினிமாவில் விஜய்யின் படங்கள் அதிக வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. இதனால் வசூல் மன்னன் என்று விஜயை அவரது ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் துணிவு படத்தின் மூலம் அதை முறியடித்து உள்ளார் அஜித். ஏனென்றால் முதல் நாள் வசூலில் வாரிசை காட்டிலும் துணிவு படம் தான் அதிக வசூல் செய்திருந்தது.

மேலும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரிசு படம் தெலுங்கு சாயலில் குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதுவே துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுத்திருந்தனர். வலிமை படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் படத்தை செதுக்கியுள்ளார் வினோத்.

இதனால் வாரிசை ஓரம் கட்டிய திரையரங்கு உரிமையாளர்கள் துணிவு படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கி உள்ளனர். அதன்படி படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இன்று அஜித்தின் துணிவு படத்திற்கு 1384 காட்சிகள் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் துணிவு படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் வாரிசு படத்திற்கு 912 காட்சிகள் மட்டுமே இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆட்டநாயகனாக அஜித் முன்னேறி உள்ளார். மேலும் தொடர்ந்து துணிவு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் வரும் நாட்களில் இன்னும் அதிக காட்சிகள் ஒதுக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இவ்வாறு துணிவு படத்தால் விஜய்யின் கேரியரையே ஆட்டம் காண வைத்துள்ளனர். ஆனாலும் வாரிசு படமும் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்திருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் வாரிசு படம் குறைந்த வசூலை பெற்றாலும் மற்ற மொழிகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது. எனவ பெரிய அளவில் வாரிசு படத்திற்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!