சிம்புவின் வாய்ப்பை தட்டி தூக்கிய பிரதீப் ரங்கநாதன்

#Actor #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
சிம்புவின் வாய்ப்பை தட்டி தூக்கிய பிரதீப் ரங்கநாதன்

நடிகர் சிம்புவுக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் அடிமேல் அடியாகவே இருந்தது. சினிமாவில் இருந்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலைமை கூட வந்தது. ஆனால் சிம்பு அதை எல்லாம் தாண்டி தன்னுடைய கடின உழைப்பின் மூலம் மீண்டும் நல்ல படங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தின் போது தன்னுடைய உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன்பின்னர் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார்.

இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய ஹிட் படமானது. அதன் பின்னர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்திருக்கின்றன.

பத்து தல திரைப்படத்திற்கு பிறகு சிம்பு, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. கோகுல் ஏற்கனவே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இன்னும் ஹிட் படத்தை இயக்கியவர். தற்போது இந்த படத்தை பற்றி ஒரு புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதாவது வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் கொரோனா குமார் திரைப்படத்திலிருந்து நடிகர் சிம்பு விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்தப் படத்தில் சிம்புவின் கேரக்டரில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார்.

பிரதீப் ஏற்கனவே வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தான் தன்னுடைய முதல் படமான கோமாளி திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பின்னர் இவர் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் அவருக்கு கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இந்நிலையில் இப்போது கொரோனா குமார் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!