ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஊத்தி மூட இருந்த உதயநிதிக்கு, கடைசி நேரத்தில் கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

#Cinema #TamilCinema #Tamil Nadu #Tamil #Tamilnews #Lanka4
Kanimoli
1 year ago
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஊத்தி மூட இருந்த உதயநிதிக்கு, கடைசி நேரத்தில் கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

உதயநிதி ஸ்டாலின் நடிகர் என்பதை காட்டிலும் தற்போது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பட்டையை கிளப்பி வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது.

தற்போது சினிமாவை விட்டு விலகி முழு அரசியல்வாதியாக மாறிய உதயநிதி ஸ்டாலின் ஆறு மாதங்களுக்கு முன்பு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை மூடி விடலாம் என முடிவு செய்திருந்தாராம். காரணம் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் அனைத்து படங்களையும் மிரட்டி வாங்கி வெளியிடுகிறோம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.

இதனால் முக ஸ்டாலின் அவர்களும் எதற்காக இந்த அசிங்கம் தேவையில்லை நிறுத்துங்கள் என கூறிவிட்டார். அதனால் வேண்டாம் என்று முடிவெடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளார் உதயநிதி. ஆனால் உதயநிதியை அப்படி செய்யப்படாமல் கடைசியில் ஒரு புண்ணியவான் கண்ணை திறந்து விட்டிருக்கிறார்.

அதாவது உலக நாயகன் கமலஹாசன் எதார்த்தமாக உதயநிதியின் அப்பாவிடம் பேச, ‘இப்பொழுது தான் தமிழ் திரைப்படங்கள் வெளிப்படையான முறையில் கணக்கு வழக்குகள் ஒழுங்கான முறையிலும் உதயநிதி செய்து வருகிறார்’ என்று பாசிட்டிவ்வான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

இதனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நிறுத்த திட்டம் போடப்பட்டு ஊத்தி மூடும் முடிவில் இருந்தது. ஆனால் உதயநிதியின் பிரச்சனையில் கமல் தலையிட்டு பிரச்சனையை வேற மாதிரி மாற்றி விட்டார். தயவு செய்து அவரை நிறுத்த சொல்லாதீர்கள் தொடர்ந்து செய்யட்டும் என அப்பாவிடம் கூறி மீண்டும் இயக்க வைத்தவர் கமல்.

அதனால் நிறைய படங்களை பண்ணாமல் இனிமேல் குறிப்பிட்ட பெரிய படங்களை மட்டும் பண்ண முடிவு எடுத்து செய்து வருகிறோம் உதயநிதி. மேலும் அரசியலில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் உதயநிதிக்கு சினிமாவை தயாரித்து பணம் சம்பாதிக்கும் அவசியம் தற்போது இல்லையாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!