ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் பதான் படத்தின் முதல் நாள் வசூல்.

#TamilCinema #Cinema #Tamil Nadu #Tamil People #Tamilnews #Tamil #Lanka4
Kanimoli
1 year ago
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் பதான் படத்தின் முதல் நாள் வசூல்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த நான்கு வருடங்களாக எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது பதான் மற்றும் ஜவான் படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார். சமீபத்தில் பதான் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவிலேயே பல கோடிகளை குவித்து வந்தது.

மேலும் பதான் படம் வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளை சிக்கி வந்த நிலையில் இப்போது படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ட்விட்டரில் பதான் படத்திற்கு ரசிகர்கள் நேர்மையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். மேலும் ஷாருக்கான் இந்த படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

இதன்படி பாலிவுட் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டியலில் தற்போது பதான் படம் இணைந்துள்ளது. அதாவது முதல் நாள் வசூலில் இந்திய அளவில் 57 கோடியும், உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. முதல் நாளே ஷாருக்கானின் படம் இவ்வளவு வசூல் செய்தது பாலிவுட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்த அடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷாருக்கானின் பதான் படம் ஆயிரம் கோடி கிளப்பில் விரைவில் இணையும் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஷாருக்கான் பாலிவுட் சினிமாவை பதான் படத்தின் மூலம் மீட்டெடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பதான் படாதின் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கானின் அடுத்த படமான ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பாகி உள்ளது. மேலும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!